கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா..!உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.54 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஜூன்-17

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 354065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2003 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11903 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 186935 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 155227 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,13,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5537 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 57,851 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 48,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 26,782 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 44,688 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 1837 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,500 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *