இந்தியா – சீனா மோதல்.. மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம்..

எல்லையில் சீன படைகளுடன் நடந்த மோதலில் காயமடைந்த இந்திய வீரர்களில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி, ஜூன்-17

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், காயமடைந்த இந்திய வீரர்களில் 4 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் 14வது படை பிரிவை சேர்ந்த வீரர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான காயங்கள் காரணமாக தற்போது இவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள். தற்போது இவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *