இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதி இல்லை.. முதல்வர் நாராயணசாமி அதிரடி

தமிழகத்தில் இருந்து வருவோர் இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, ஜூன்-16

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க சென்னையில் வருகிற 19-ந் தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னையை யொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள புறநகர் பகுதிகளுக்கும் இது பொருந்தும்.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வருவோர் இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர், விழுப்புரத்தில் இருந்து மருத்துவ உதவிக்காக வருவோர் தவிர பிறருக்கு புதுச்சேரிக்குள் அனுமதியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடலூர், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் எல்லைகளுக்கு நாளை முதல் சீல் வைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுச்சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியைச் சுற்றியுள்ள மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *