டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா இல்லை.. பரிசோதனையில் தகவல்..!
டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
டெல்லி, ஜூன்-16

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இன்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. இதனையடுத்து அவர் உனடியாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதால் உடனடியாக கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. சற்றுமுன் அவரது பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது.