லடாக் எல்லை மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்! – ஸ்டாலின் இரங்கல்

சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-16

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவப் படைகளுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்!

22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி,தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *