லடாக் எல்லையில் பதற்றம்..முப்படை தளபதிகளுடன் மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை…!

சீன எல்லையில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

டெல்லி, ஜூன்-16

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அங்கு படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதன்படி, இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடந்தது. இதில், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டதையடுத்து சீன படைகள் இந்திய எல்லையில் இருந்து திரும்ப தொடங்கின. இந்நிலையில், லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா படைகளை திரும்பிக் கொண்டிருந்தபோது இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எதற்காக? எப்படி? மோதல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதில், ஒருவர் அதிகாரி 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாகவும், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் மோதல் ஏற்பட்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் இதில் பங்கேற்றனர். கிழக்கு லடாக்கில் நடந்த மோதல் குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *