எல்லையில் சீன ராணுவம் தாக்குதல்… ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரர் வீரமரணம்!!

எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

சென்னை, ஜூன்-16

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அங்கு படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதன்படி, இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடந்தது. இதில், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டது.இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனியும் (வயது 40) ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி. 40 வயதான பழனி 32 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்த நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனிக்கு 10 வயதில் மகனும் 8 வயதில் மகளும் உள்ளனர்.

ராணுவ வீரரின் உடல் நாளை காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *