தமிழகத்தில் புதிதாக 1843 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 44 பேர் பலி

தமிழகத்தில் இன்று 1843 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, ஜூன்-15

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று வரை தமிழகத்தில் மொத்தம் 46,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;-

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 25,344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 797 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 479-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1257 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 33,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 79 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 20,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 7,29,002 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.49% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,403 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1438 பேருக்கு தொற்று உறுதியானது.
  • கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும்.
  • தடுப்பூசிகள், மருந்துகள் இல்லமால் சிகிச்சை அளிக்கும் முறையை அரசு பின்பற்றுகிறது.
  • தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதால், விரைவில் குணப்படுத்தப்படுகிறது.
  • மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரசை அரசு கட்டுப்படுத்தி வருகிறது.
  • மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம்.
  • வல்லரசு நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன தமிழக அரசு களத்தில் நின்று போராடி வருகிறது.
  • கொரோனா தொடர்பான எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை,மறுக்கவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *