சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு.. தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-15

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதுபற்றி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கும். மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை பெருநகர் சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *