சென்னையில் நாளை முதல் 30ம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்கப்படும்.. வெள்ளையன்..

சென்னையில் நாளை முதல் 30ம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்கப்படும் என்று வணிகர் பேரவை சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-15

இதுதொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் கொரோனா பரவுவதை கவனத்தில் கொண்டு, நாட்டின் நலன், மக்கள் நலன் மற்றும் வணிகர்களின் நலன் கருதி, பரவலைத் தடுக்கும் வகையில் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவுறுத்தலின் படி, 16-6-2020 முதல் 30-6-2020 வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாபாரம் செய்து, மதியம் 2 மணிக்கு கடைகளை அடைக்க வேண்டும் என்று மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

வணிகர்களும், பொதுமக்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் உபயோகப்படுத்த வேண்டும், தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என வணிகர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *