கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளுக்கு திருமணம்.. புகைப்படங்கள் உள்ளே..

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் – இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசியத் தலைவர் பி.ஏ. மொஹம்மத் ரியாஸ் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று காலை மிக எளிமையாக நடைபெற்றது.

திருவனந்தபுரம், ஜூன்-15

கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் இல்லத்தில், கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்புக் காரணங்களுக்காக மிகக் குறைவான உறவினர்களே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உறவினர்கள் தவிர்த்து, கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சஜீஷ் உள்ளிட்டோரும் திருமண விழாவில் பங்கேற்றனர்.

பினராயி விஜயனின் மகள் வீணா, தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாண் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். மணமகன் மொஹம்மது ரியாஸ் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.எம். அப்துல் காதரின் மகனாவார். முகமது ரியாஸ், பள்ளி நாட்களிலேயே அரசியல் மீது ஆர்வம் கொண்டவர். இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ), தலைவராக உள்ளார்.

இருவருக்குமே இது 2வது திருமணம் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *