கலைஞானத்துக்கு வீடு வாங்கி கொடுத்து சொன்னதை நிறைவேற்றினார் ரஜினி

 அக்டோபர்.7

ரஜினி தன்னை  கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு ரூ.45 லட்சம் மதிப்பில் வீடு வாங்கி கொடுத்துள்ளார்.

கதையாசிரியரும் திரைப்பட தயாரிப்பாளருமான காலைஞானம். பைரவி திரைப்படத்தில் ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அண்மையில்  அவரது 90 வது பிறந்த நாள் மற்றும் சினிமாத்துறையில் கலைஞானத்தின் 75  ஆண்டு கால  பயணம் குறித்து பாராட்டு விழா நடைபெற்றது.  இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில் ரஜினி,சிவக்குமார்,வைரமுத்து  உள்ளிட்ட திரை பிரபலங்களும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

 கலைஞானம் வாடகை வீட்டில் வசிப்பதை அறிந்த ரஜினி,விழா மேடையில் அவருக்கு வீடு வாங்கி தருவதாக கூறினார்.

அறிவித்தபடி  சென்னை விருகம்பாக்கத்தில், ரூ.45 லட்சம் மதிப்பில், 1320 சதுர அடியில் மூன்று படுக்கை அறை வசதிகள் கொண்ட வீட்டை கலைஞானத்துக்கு,ரஜினி வாங்கி கொடுத்துள்ளார். அந்த வீட்டிற்கு இன்று நேரில் சென்ற ரஜினிகுத்து விளக்கு ஏற்றிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *