பெட்ரோல், டீசல் விலை 9வது நாளாக இன்றும் அதிரடி உயர்வு..!!

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4.87 உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-15

கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனையால் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கிது. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயிக்கவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனங்கள் அதிக அளவில் இயங்க தொடங்கிய நிலையில், கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அன்றைய தினம் பெட்ரோல் 53 காசுகளும், டீசல் 52 காசுகளும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தினந்தோறும் விலை உயர்த்தப்படுகிறது. அவ்வகையில் இன்று 9வதுநாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை கடந்த ஜூன் 8ம் தேதி முதல் தினமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 48 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 23 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4.87 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை 43 பைசா உயர்ந்து 79.96 க்கு விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 பைசா உயர்ந்து 83.17 ஆக விற்பனையாகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை இன்று 0.48 பைசா உயர்ந்து 76.26 பைசாவுக்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.46 பைசா உயர்ந்து 78.10க்கு விற்பனையாகிறது.

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 0.51 பைசா உயர்ந்து 72.69க்கு விற்பனையாகிறது. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 0.59 பைசா உயர்ந்து 74.62க்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் டீசல் விலை 0.53 பைசா உயர்ந்து 70.33க்கு விற்பனையாகிறது. மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 0.57 பைசா உயர்ந்து 73.21க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *