மக்கள் ஒத்துழைப்பு இல்லைனா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது… அமைச்சர் உதயகுமார் பேட்டி..!

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, ஜூன்-15

சென்னை அயனாவரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது ;-

தமிழகத்தில் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாரவ கட்டுப்படுத்த முடியும் .பொதுப்பணியில் ஈடுபடுவோர் தங்கள் உடல்நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்களை காக்கும் போரில் தன்னை அப்பணித்துக் கொண்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

தமிழகத்திலும் அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம். சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்து அறிவிப்பார்கள். சென்னையில் 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தொழிலாளர்கள் தங்கள் பணி முடிந்துதான் சென்னையில் இருந்து வெளியே செல்கின்றனர்.சென்னை வந்து செல்வோரை தடுக்க முடியாது. அவர்கள் ஏதாவது வேலை காரணமாக வந்துவிட்டு திரும்புவராக இருக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *