இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.32 லட்சத்தை தாண்டியது.. 9520 பேர் பலி..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.32 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில், 1.69 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி, ஜூன்-15

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 332424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 11502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 325 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9520 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 169798 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 7419 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 153106 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 107958 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3950 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50,978 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 44,661 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 435 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24,547 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 41,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 1327 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15,823 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *