சென்னையில் மாயமான 277 கொரோனா நோயாளிகள்.. மாநகராட்சி அறிவிப்பால் அதிர்ச்சி!

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 பேர் மாயமானதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-14

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் தான் அதிக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 பேர் மாயமானதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், ‘சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயமாகி விட்டனர். தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை விட்டு மாயமாகி விட்ட அந்த 277 பேரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

277 பேர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *