தமிழகத்தில் ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1974 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, ஜூன்-14

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,974 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,941 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1138 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 435-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,415 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 31,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 79 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 19,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 7,10,599 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.97% ஆக உள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.96% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,782 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1974 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 27,520 ஆண்கள், 17,124 பெண்கள், 17 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *