பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் பாலிவுட்..!!

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பை, ஜூன்-14

2013ல் Kai po che என்ற படத்தில் அறிமுகமான இவர், கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த Kai po che, எம்.எஸ். தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி ஆகிய படத்திற்கு விருதுகளை பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சிச்சோர்’ இவரது நடிப்பில் வெளியான கடைசிப் படமாகும். மேலும் இவர் நடித்த ‘தில் பச்சாரா’ என்ற படம் மே 8 ஆம் தேதி வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *