பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது ஏன்? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்த நடவடிக்கை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, ஜூன்-13

சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

பீலா ராஜேஷ் மாற்றத்தில் வேறு எந்த காரணமும் இல்லை. அவர் மாற்றப்பட்டது முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த நடவடிக்கை.
முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய 3 விஷயங்களை பின்பற்றினால் கொரோனா வைரஸ் வர வாய்ப்பில்லை. கொரோனாவில் யார் அரசியல் செய்தாலும், அவர்கள் மக்களால் தனிமைபடுத்தப்படுவார்கள். சூழலை பொறுத்து உரிய நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *