ரேஷன் கடையில் மீண்டும் நிவாரணம் வழங்கப்படுமா?- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..!

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை பொறுத்துதான் நியாயவிலைக் கடைகளில் மீண்டும் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை, ஜூன்-13

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு கழகம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட 35, 36, 51 ஆகிய வார்டு பகுதிகளில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ;-

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை பொறுத்துதான் நியாயவிலைக் கடைகளில் மீண்டும் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். பொதுமக்களின் நிலையை அறிந்து தான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு போடுங்கள் என்றால் எப்படி போட முடியும்?. நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கோட்டை விட மாட்டோம்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *