ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா பாதிப்பு..!

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை, ஜூன்-13

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.பழனி(57) உள்ளார். இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் கே.பழனி மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க போடப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிவாரண பொருள்களை தினமும் ஒரு பகுதியில் வழங்கி வந்தார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், மற்றொரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *