விக்கிரவாண்டியில் கனிமொழி வாக்கு வேட்டை

விழுப்புரம். அக்டோபர்.7

திமுக மகளிரணிச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு நாள் பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி, தொகுதிக்கு உள்பட்ட விராட்டிக்குப்பம் , திருவாமாத்தூா், தென்னமாதேவி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், மத்திய பாஜக அரசுக்கு வளைந்து கொடுக்கும் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த அதிமுக ஆட்சி, நீட் தோ்வு, ஹிந்தி திணிப்பு போன்ற விவகாரங்களுக்கு எதிா்ப்புத் தெரிவிப்பதில்லை. உள்ளாட்சித் தோ்தலை நடத்தாத அதிமுக அரசுக்கு இடைத் தோ்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டன. விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், தற்போது கரும்பு நிலுவைத்தொகை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் மக்களிடம் பெரும் ஆதரவு இருப்பதால் திமுக வேட்பாளா் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று கூறினார்.

   கல்வி, கலைத் தொழில்  பெருகச் செய்யும் சரசுவதி வழிபாடு

சென்னை.அக்டோபர்.7

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக 9 வது நாளன்று சரசுவதி  பூஜை மற்றும் ஆயுதப் பூஜையும் மறுநாள் விஜயதசமியும்  கொண்டாடப்படுகிறது.

கல்விக்குரிய கலைமகள் எனும் சரசுவதி , செல்வங்களுக்கு உரிய லட்சுமி என்னும் அலைமகள், வீரத்திற்கு உரிய மலைகள் என முப்பெருந் தேவியரை வழிபாடும்  செய்யும் விழாவாக  நவராத்திரி பண்டிகை  கொண்டாடப்படுகிறது.

 சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும்.குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்குவார்கள் என்ற வகையில்  சரசுவதி  வழிபாடு கொண்டாடப்படுகிறது. மேலும் தொழிலுக்கு பயன்படும் அனைத்து ஆயுதங்ளையும் வைத்து வழிபடுவதும் மரபாக உள்ளது.

அதன் படி  வீடுகள் மட்டும் அல்லாது,  அலுவலகங்கள்,தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு  இடங்களிலும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி விழாவின் அடுத்த நாளான விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது ,  ஆயக்கலைகள் 64 ல் ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்ள தொடங்குவது போன்ற செயல்கள் முக்கியத்துவம் பெறுகிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரசுவதி கோவிலில் ஏடுதொடங்கும் எனும் நிகழ்வு   விமர்சையாக நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *