மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி ஐகோர்ட்டில் அதிமுக மனு தாக்கல்

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி ஐகோர்ட்டில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனுதாக்கல் செய்துள்ளார்.

சென்னை, ஜூன்-13

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரே காணத்திற்காக அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்தது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின்கீழ் வராது எனக்கூறி மனுவை திரும்ப பெறுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி ஐகோர்ட்டில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனுதாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *