தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா.. மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை…!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, ஜூன்-13

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறைக்கப்பட்டு மேலும் விதிமுறைகள் அதிகரிக்கப்படுமா என்பது பற்றி எல்லாம் மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிப்பு செய்வதற்கு முன் மருந்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *