இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கும் நிலையில், 1.47,195 பேர் குணமடைந்துள்ளனர். 8,498 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, ஜூன்-12

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 297535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 396 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8498 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில்,10,956 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் இந்தியாவில் வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதுவரை 147195 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 141842 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 97648 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 3,590 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 46,078 பேர் குணமடைந்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று வரை 38,716 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 34,687, குஜராத்தில் 22,032, உத்தர பிரதேசத்தில் 12,088, ராஜஸ்தானில் 11,838, மத்திய பிரதேசத்தில் 10,241, மேற்குவங்கத்தில் 9,768 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *