தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்..! மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்..!!

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, ஜூன்-12

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணனை மீண்டும் அந்த துறைக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2012 – 2019ம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதால், தற்போது தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஜெ. ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *