உலகளவில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா..!!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டெல்லி, ஜூன்-11

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இன்று மாலை நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,93,754 ஆக உயர்ந்ததால் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பிரேசில் 7,75,581 உடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்று ரஷியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. ரஷியா 5,02,436 எண்ணிக்கையுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 20,71,495 உடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *