கல்வி, கலைத் தொழில் பெருகச் செய்யும் சரசுவதி வழிபாடு

   கல்வி, கலைத் தொழில்  பெருகச் செய்யும் சரசுவதி வழிபாடு

சென்னை.அக்டோபர்.7

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக 9 வது நாளன்று சரசுவதி  பூஜை மற்றும் ஆயுதப் பூஜையும் மறுநாள் விஜயதசமியும்  கொண்டாடப்படுகிறது.

கல்விக்குரிய கலைமகள் எனும் சரசுவதி , செல்வங்களுக்கு உரிய லட்சுமி என்னும் அலைமகள், வீரத்திற்கு உரிய மலைமகள் எனும் பார்வதி என முப்பெருந் தேவியரை வழிபாடும்  செய்யும் விழாவாக  நவராத்திரி பண்டிகை  கொண்டாடப்படுகிறது. வட நாடுகளில் மகிஷாசூரணை அழித்த பார்வதி தேவியை போற்றும் துர்காஷ்டிமி விழாவாக கொண்டாடப்படுகிறது.

 சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும்.குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்குவார்கள் என்ற வகையில்  சரசுவதி  வழிபாடு கொண்டாடப்படுகிறது. மேலும் தொழிலுக்கு பயன்படும் அனைத்து ஆயுதங்ளையும் வைத்து வழிபடுவதும் மரபாக உள்ளது.

அதன் படி தமிழகத்தில்  வீடுகள் மட்டும் அல்லாது,  அலுவலகங்கள்,தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு  இடங்களிலும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி விழாவின் அடுத்த நாளான விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது ,  ஆயக்கலைகள் 64 ல் ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்ள தொடங்குவது போன்ற செயல்கள் முக்கியத்துவம் பெறுகிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரசுவதி கோவிலில் ஏடுதொடங்கும் எனும் நிகழ்வு   விமர்சையாக நடைபெறும்.

கனடாவில் நவரராத்திரி விழா

கனடா,அமெரிக்கா,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் நவராத்திரி விழா தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *