சென்னையில் 15 நாட்களுக்கு கடைகளை அடைக்கத் தயார்…விக்கிரமராஜா பேட்டி…!!

சென்னையில் 15 நாள் ஊரடங்கை அறிவித்தால், கடைகளை அடிக்க தயார் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-11

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விக்கிரமராஜா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வணிகர்களின் பிரச்னைகள், அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழக கூடுதல் முதன்மை செயலாளரிடம் வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, கொரோனா தொற்று சென்னையில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழக அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள், வணிகர்கள் நலன் கருதி சென்னையில் முழுமையாக குறைந்தது 15 தினங்கள் கண்டிப்பான முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வணிகர்கள் குழு ஒத்துழைப்பையும் அளித்து கடைகளை அடைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அரசு உரிய கவனம் செலுத்தி நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தியாக உணர்வுடன் ஆதரவு அளிக்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

காய்கறி மார்க்கெட், வணிக வளாகம், திருமண மண்டபங்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். மாநகராட்சிகளில் கடைகளுக்கு தேவையின்றி சீல் வைப்பதை தடுக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி கடைகளுக்கு 2 மாத வாடகையை ரத்து வேண்டும். மத்திய அரசின் நிவாரணம் அடித்தட்டு வணிகர்களுக்கும் சென்றடைய நடவடிக்கை தேவை. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *