அரசியலுக்கு வருகிறார் எடப்பாடியார் மகன் மிதுன்

சென்னை ஆகஸ்ட் 30

தமிழக அரசியல் களத்தில் இன்னொரு வாரிசு ஒன்று வெகு விரைவில் அவதாரமெடுக்க உள்ளது.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அரசியலுக்கு வருவார் என்று தகவல்கள் பரப்பப்படுகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம், நாடாளுமன்ற தேர்தலுக்கு சீட் கேட்டு விண்ணப்பிக்கும்போதே நிறைய வாரிசுகளின் பெயர் அதிமுக தரப்பில் அடிபட்டது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் பெயரில் விருப்ப மனு வாங்க உள்ளதாகவும் தகவல் ஒன்று கசிந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது எம்பி, எம்எல்ஏ தேர்தலில் வாரிசுகளுக்கு போட்டியிட எப்போதும் வாய்ப்பு அளிக்கவே மாட்டார். அப்படியே இவர்கள் வாய்ப்பு அளித்தாலும், ஒருமுறைக்கு பத்துமுறை யோசித்துதான் செய்வார்கள்.சீனியர்கள் வாரிசு அரசியல் என்றாலே திமுகதான் என்று பதிந்துவிட்ட நிலையில், அதிமுகவும் இந்த ரேஸில் கடந்த எம்பி தேர்தலில் இணைந்துவிட்டதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் , ஓபிஎஸ். மகன் ரவீந்திரநாத் , ராஜன் செல்லப்பா மகன் சத்யன்.. இவர்களுக்கு சீட் தரும்போதும் தொண்டர்களும், அதிமுகவின் சீனியர்களும் குமுறதான் செய்தார்கள். இப்போது ஒரு வாரிசு தவிர மற்றவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், உரிய முக்கியத்துவத்தை வழங்க தந்தைமார்கள் முயன்று வருகிறார்கள்.ஓபிஎஸ் மகன்அந்த வகையில், எடப்பாடியார், தன் வாரிசான மிதுனை கட்சியில் முன்னிறுத்த முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. கட்சி நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்கவும் வழி செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம், ஓபிஎஸ் மகனுக்கு இணையாக தன் மகனையும் கொண்டு வர வேண்டும் என்பதாக இருக்கலாம் அல்லது ஒரு தந்தையின் அடித்தளத்து ஆசையாகவும் இருக்கலாம்.

ஆனால் டெல்லியில் தனது செல்வாக்கை எப்படியாவது ஊன்ற வேண்டும் என்பது எடப்பாடியாரின் உறுதியான எண்ணமாகவே உள்ளது. அதற்காக தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ராஜ்ய சபா சீட் உட்பட பலவற்றை செய்தும், ஓபிஎஸ்-க்கு நிகரான, அல்லது அதைவிட உயர்ந்த செல்வாக்கை டெல்லியில் எடப்பாடியால் பெற முடியாமல் போனதாக தெரிகிறது. அதனால்தான் தமது மகன் மிதுனை களத்தில் இறக்கிவிட எடப்பாடியார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன. அதற்கேற்ற மாதிரி, மிதுனும், ஆர்வத்துடன் தனது பங்களிப்பை தந்து வருகிறாராம். இவை எந்த அளவுக்கு உண்மையோ, பொய்யோ தெரியாது. ஒருவேளை எடப்பாடியாரின் மகன் திறமையானவராக இருந்தும், வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக அவரை ஒதுக்கிவிடுவதும் நியாயம் இருக்காதுதான். ரத்தத்தின் ரத்தங்கள் எப்போதும் வாரிசை கொண்டாட தயங்கியதே கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *