நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு நடிகர்கள் இரங்கல்

குமுளி அக்டோபர்.7

 நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால்  இன்று காலாமானார்.

 திரைப்பட தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி, விஜயகாந்த் நடித்த தவசி,நான்கடவுள் எல்லாம் அவன் செயல்’ உள்ளிட்ட பல படங்களில்   நகைச்சுவை வேடங்களில்  நடித்துள்ளார். இந்நிலையில் குமுளியில் நடந்த படப்பிடிப்பின் போது மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அதிகாலை 4.30 மணிக்கு குமுளி அருகே வண்டிபெரியாறில் நடந்த திரைப்பட படப்பிடிப்பில் திடீரென கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை படக்குழுவினர் கொண்டுசென்றார்கள். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்

 தவசி படத்தில் எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா” என்று வடிவேலுவிடம் ஒசாமா பின்லேடனின் அட்ரஸ் கேட்கும்  காட்சி,  கிருஷ்ணமூர்த்தியை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

 தவசி படத்தில் வடிவேலுடன் கிருஷ்ணமூர்த்தி

 அதன் பின்னர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில்  நகைச் சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தா கிருஷ்ணமூர்த்திக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *