கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய குழு.. சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-10

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக இதுவரை 1,563 சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோம். முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. அதை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவர். கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர் குறித்த தகவல்களை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது.

எனினும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர்கள் உயிரிழந்த காரணம் குறித்து அறியவும் மருத்துவக்கல்வி இயக்குனரகம், சுகாதாரத் துறை, மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பதை இந்த குழு ஆராயும்.

இவ்வாறு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *