கிண்டி கிங் ஆய்வு மையத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய புதிய சிகிச்சை மையம்.. அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிண்டியில் கொரோனா சிகிச்சை அளிக்க 81 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சென்னை, ஜூன்-9

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி சோதனை மையத்தில் தினமும் 1,500 கொரோனா பரிசோதனை நடத்த இயலும். கிண்டியில் கொரோனா சிகிச்சை அளிக்க 81 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன.

88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. stop corona என்ற இணயத்தளத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரங்களை அறியலாம். stop corona என்ற இணயத்தளத்தில் மேலும் பல தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதிகள் வழங்க முன்வந்துள்ளன.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். சென்னை மாநகராட்சியில் சிசி சென்டர் மற்றும் ஹெல்த் சென்டர் ஆகியவற்றை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *