ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு செப். 30 வரை நீட்டிப்பு

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாதவர்களுக்கான காலக்கெடு, செப்டம்பர் 30 வரை நீட்டித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, ஜூன்-9

கொரோனா தொற்றுப் பரவலால் கொண்டு வரப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக, நாடு முழுஙதும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டதால், வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் முடிந்த நிலையில், அவற்றின் காலக்கெடு ஏற்கனவே ஜூன் 30 வரை வழங்கப்பட்டு, பிறகு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம், மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மோட்டார் வாகனங்களுக்கான ஆவணங்களை செப்டம்பர் வரை பயன்படுத்தலாம் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு சாலை போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *