மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50 சதவீத இடஒதுக்கீடு.. உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மனு

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% ஒதுக்கோரி அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது.

டெல்லி, ஜூன்-9

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை. மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைந்து வருகிறது.

இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ள முந்தைய நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்ய வேண்டும். அகில இந்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல பிற மாநிலங்களில் அந்தந்த மாநில இடஒதுக்கீடு விதிகளைப் பின்பற்ற உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் மீது 11ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *