இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,66,598-ஆக உயர்வு.. இதுவரை 7,466 பேர் பலி..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,56,611-லிருந்து 2,66,598-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,135-லிருந்து 7,466-ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, ஜூன்-9

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 266598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 331 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7466 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது. இதுவரை பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 129215 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48.5 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 129917 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 88528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 33229 பேருக்கும், டெல்லியில் 29943 பேருக்கும், குஜராத்தில் 20545 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *