தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி, ஜூன்-9

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். இதன்படி, அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழக பாடத்திட்டத்தில் புதுச்சேரியில் வகுப்புகள் நடைபெறுவதால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைபோல், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். 12-ம் வகுப்பு தேர்வைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக் கேற்ப 12-ம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *