தெலுங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி…அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத், ஜூன்-8

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏறக்குறைய முடிந்து விட்ட காரணத்தால் மார்ச் 25-ந்தேதிக்குப்பிறகு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் ஒரு சில பாடத்தேர்வு மட்டுமே பாக்கி உள்ளது.

ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்காததால் ஒவ்வொரு மாநிலமும் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 10-ம் வகுப்பு மார்க் அடிப்படையில்தான் 11-ம் வகுப்பில் மாணவர்கள் எந்த பிரிவை தேர்வு செய்வது என்பது நிர்ணயிக்கப்படும். இதனால் பொதுத்தேர்வை நடத்த பல மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இருப்பினும் நாடு முழுவதும் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தெலங்கானாவில் இன்று முதல் ஜூன் 15ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட இன்டெர்னல் அசைன்மென்ட் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *