மருத்துவமனையில் இடமில்லை என்று கூறிய நடிகர் வரதராஜன் மீது நடவடிக்கை.. அமைச்சர் விஜயபாஸ்கர்…!

கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

சென்னை, ஜூன்-8

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு 1000-கணக்கில் உயர்ந்து வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த குழுவில் உள்ள அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், அன்பழகன், காமராஜ் குழுவில் கூடுதலாக சேர்க்கப்பட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

டிவி நடிகர், பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார். பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தடுப்பில் கடும் நெருக்கடியுடன் அரசு செயல்படும் சூழலில் வதந்தி பரப்பக் கூடாது. ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த முதற்கட்டமாக 30 மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன.  முகக் கவசம், அணிவதுடன்,சமூக விலகலை கடைபிடித்தாலே கொரோனா பரவலை தடுக்க முடியும். பொதுமக்கள் உறங்கும் சமயத்திலும் கூட மருத்துவர்கள், செவிலியர்கள் அயராமல் பணியாற்றி வருகின்றனர். வேண்டிலேட்டர் தேவைப்படுவர்களுக்கு மட்டுமே அதனை பயன்படுத்த முடியும். இன்று 6 பேர் வெண்டிலேட்டரில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *