சென்னையில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. ராயபுரத்தில் 4,000ஐ நெருங்கும் பாதிப்பு..!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜூன்-8

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 16,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 269-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. 10,954 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 212-ஆக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,859 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 2,431 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,167 பேருக்கும், அண்ணாநகரில் 1,974 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.தண்டையார்பேட்டையில் 2,835 பேரும், தேனாம்பேட்டையில் 2,518 பேரும், திருவொற்றியூரில் 813 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *