ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர், ஜூன்-8

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் பிஞ்சோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஜம்முகாஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்த அனைத்து பயங்கரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *