உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது..!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.06 லட்சத்தை தாண்டியது.

ஜூன்-8

உலகளவில் தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 70,91,634 ஆக உள்ளது. இதுவரை 406,192 பேர் பலியாகியுள்ளனர். 34,61,061 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53,753 பேரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது.

அங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 20,07,449ஆக இருக்கிறது. வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 1,12,469ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 6,91,962 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்யா (4,67,673 பேர் பாதிப்பு) இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா தற்போது 6வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 257,486 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 112,469 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,007,449 ஆக அதிகரித்துள்ளது.
 • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,899 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234,998 ஆக உயர்ந்துள்ளது.
 • பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 37,312 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 691,962 ஆக அதிகரித்துள்ளது.
 • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,136 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 288,630 ஆக அதிகரித்துள்ளது.
 • ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 467.673 ஆக அதிகரித்துள்ளது.
 • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,155 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 153,977 ஆக அதிகரித்துள்ளது.
 • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 40,542 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286,194 ஆக உயர்ந்துள்ளது.
 • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,281 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171,789 ஆக அதிகரித்துள்ளது.
 • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,595 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,226 ஆக அதிகரித்துள்ளது.
 • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,776 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 185,869 ஆக அதிகரித்துள்ளது.
 • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6013 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,574 ஆக அதிகரித்துள்ளது.
 • சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,040 ஆக அதிகரித்துள்ளது.
 • துருக்கியில் 4,692 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,921 பேரும், கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,800 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *