இந்தியாவில் 2.5 லட்சத்தை தாண்டியது, கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி உள்ளது.

டெல்லி, ஜூன்-8

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 256611 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9983 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 206 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7135 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

இதுவரை 124095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4802 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 125381 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 85 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 85975 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 31667 பேருக்கும், டெல்லியில் 27654 பேருக்கும், குஜராத்தில் 20070 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *