அரசு அதிகாரியை செருப்பைக் கழற்றி அடித்த பாஜகவின் டிக் டாக் புகழ் சோனாலி..!

பாஜகவை சேர்ந்த டிக்டாக் புகழ் சோனாலி போகாத், அரசு அதிகாரியை காலணியால் அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சண்டிகர், ஜூன்-6

அரியானா மாநிலத்தை சேர்ந்த டிக்டாக் புகழ் சோனாலி போகாத், பாஜகவைச் சேர்ந்தவர்..

இவர் ஹிசாரில் உள்ள உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது இவரிடம் பல்வேறு புகார்களை உழவர்கள் கூறியிருக்கின்றனர். உடனே இதுகுறித்து ஹிசார் சந்தைக் குழு செயலாளர் சுல்தான் சிங்கிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால் அந்த அதிகாரி சோனாலியை பார்த்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திமடைந்த சோனாலி தன்னுடைய காலணியை கழற்றி அதிகாரியின் கன்னத்தில் சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சுல்தான் சிங் காவல்நிலையித்தில் புகார் அளித்துள்ளார்.

அரசு அதிகாரியை சோனாலி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *