கொரோனா பாதிப்பில் இத்தாலியை மிஞ்சிய இந்தியா.. மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறற்றம்..!

கொரோனா தொற்று பாதிப்பில், உலக அளவில் இந்தியா 6வது இடத்தை தொட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, ஜூன்-6

இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 236657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6642 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 114073 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 115942 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி, 6வது இடத்தில் இந்தியா உள்ளது. 1,965,708 நோய்த்தொற்று எண்ணிக்கையுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நாடுகள் வருமாறு:-

அமெரிக்கா – 1,965,708
பிரேசில்- 646,006
ரஷியா- 449,834
ஸ்பெயின்- 288,058
பிரிட்டன்- 283,311
இந்தியா- 236,657
இத்தாலி – 234,531
பெரு- 187,400
ஜெர்மனி – 185,414
துருக்கி – 168,340
ஈரான் – 167,156
பிரான்ஸ்- 153,055
சிலி – 122,499
மெக்சிகோ -110,026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *