உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68.44 லட்சத்தை தாண்டியது; பலி 3.98 லட்சமாக உயர்வு…!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.98 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68.44 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஜெனீவா, ஜூன்-6

சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,44,838 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,351 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 68,44,838-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, நோய்த்தொற்றுக்கு 701 போ் பலியானதைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய் பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 3,98,147-ஆக உயா்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,48,998 லட்சத்தை கடந்துள்ளது. தொற்று பாதித்தோர் 30,44,076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 53,617 -க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை சா்வதேச அளவில் அமெரிக்காவில் 19,65,708 பேரும், பிரேசில் 6,46,006 பேரும் ரஷியாவில் 4,49,834 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *