காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்கா?…அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-5

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும், இன்று முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.10 ஆம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆம் வகுப்பு தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும். மாணவர்கள் 9.45 க்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *