கோவையில் நல்லறம் அறக்கட்டளையின் சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டபம்.. அமைச்சர் S.P. வேலுமணி தொடங்கி வைத்தார்..

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் பக்தர்களுக்காக நல்லறம் அறக்கட்டளையின் சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டபம் – அமைச்சர் S.P. வேலுமணி பணிகளை தொடங்கி வைத்தார்.
.
கோவை, ஜூன்-5

கோவை அம்மா ஐஏஎஸ் அகாடமி தலைவர் எஸ்.பி.அன்பரசனை தலைவராக கொண்டு இயங்கிவரும் நல்லறம் அறக்கட்டளை, கோவை மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் சுமார் 28 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு வழங்கிய இந்த அறக்கட்டளை, கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளை புனரமைத்து, பராமரிக்கும் பணிகளையும் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நல்லறம் அறக்கட்டளை பங்களிப்புடன் கோவை பேரூரில் புகழ்பெற்ற அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நொய்யல் படித்துறையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பேரூராட்சிகள் துறையுடன் இனைந்து ரூ 5.91 கோடி மதிப்பீட்டில் சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டபம், சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்யும் வசதிக்காகவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பல்நோக்கு திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது.

தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர், தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் S.P.அன்பரசன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். துவைக்கிவைத்தார்கள். கொங்கு மண்டலத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயமாக திகழும் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ளது.

இக்கோவில் விழாக்களில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, கேரளாவைச் சேர்ந்த மக்களும் திரளாக பங்கேற்பார்கள். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நொய்யல் ஆற்றுப்பகுதியில் முன்னோர் வழிபாட்டு மண்டபம், குளியல் பகுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தாப்படும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலுமணி ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தார்.

அதனை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பூமி பூஜையுடன் பல்நோக்கு திட்டப் பணிகளை இன்று தொடங்கி வைத்துள்ளார். இதனால் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *