சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர்.

சென்னை, ஜூன்-5

சென்னையில் மொத்தம் 18,693 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,388 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் ஜெயக்குமார். கே.பி. அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

  • மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

*அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், ஆகிய மண்டலங்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *