நீர் ஆதாரங்களை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும்.. அமைச்சர் SP வேலுமணி வலியுறுத்தல்..

நீர் ஆதாரங்களை காப்பது நம் சந்ததிகளுக்கு மிகப்பெரிய சொத்து அதனை பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை, ஜூன்-5

கோவையில் பல்வேறு திட்டப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை நொய்யல் ஆற்று அமைப்பில் சரகம் 0 கி.மீ முதல் 72 கி.மீ வரை, நீலி அணைக்கட்டு முதல் குறிச்சி அணைக்கட்டு வரை, வெள்ளலூர் அணைக்கட்டு முதல் செம்மாண்டம்பாளையம் அணைக்கட்டு வரை ரூ. 174.96 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகளை பூமி பூஜையுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இதனிடையே, கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் உக்கடம் குளக்கரையில் செல்பி கார்னர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரவில் மிளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இரு மாதங்களுக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது;-

நொய்யல் ஆறு 100 ஆண்டுகளாக அகலபடுத்தி தூர் வார வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று விவசாயி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 230 கோடி நிதி ஒதுக்கி திட்டத்தை துவக்கி வைத்தார் தற்போது அந்த பணி பூமி பூஜையுடன் துவக்கப்பட்டுள்ளது. குடிமராத்து பணிகள் மூலமாக முதல்வர் செய்துள்ள சாதனையை யாரும் மறுக்க முடியாது.

இந்த திட்டத்தால் கோவை , திருப்பூர், ஈரோடு , கரூர் வரை உள்ள மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள் ஓராண்டிற்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்ய அனைத்து துறை அதிகாரிகளும் பாடுபட வேண்டும்
174 கோடி ரூபாய் கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்றுபடுக்கையை சீர் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து பள்ளங்களை புதுப்பித்தல் , கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நொய்யல் மீண்டும் உயிர் பெறும் என்பதில் சந்தேகமில்லை. நீர் ஆதாரங்களை காப்பது நம் சந்ததிகளுக்கு மிகப்பெரிய சொத்து அதனை பாதுகாக்க வேண்டும் . ஒரு கமிட்டி அமைத்து இந்த திட்டம் நல்லமுறையில் செயல்படுத்ததப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *